×

பழநி பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி

பழநி: பழநி பஸ் நிலைய பிளாட்பாரங்களை ஆக்கிரமிக்கும் பைக்குகளால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரின் மையப்பகுதியில் வஉசி மத்திய பஸ் நிலையம் உள்ளது. பழநியில் உள்ள முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பழநி பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் சராசரியாக சுமார் 700க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.  அதிகளவிலான பஸ்கள் வருவதால் பஸ் நிலையம் கடந்த திமுக ஆட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. பழநி பஸ் நிலையம் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றதாகும்.இந்நிலையில் பழநி பஸ் நிலைய பிளாட்பாரங்களில் தற்போது ஏராளமான பைக்குகள் நிறுத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிக்காக அமைக்கப்பட்டிருக்கும் சாய்வுதளங்களின் மூலம் பிளாட்பாரங்களில் பைக்குகளை நிறுத்துகின்றனர். பழநி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பணிபுரிபவர்கள், காந்தி மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்கச் செல்பவர்கள், வெளியூர் பணிகளுக்கு செல்லும் பயணிகள் போன்றோர் தங்களது பைக்குகளை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.பிளாட்பாரங்கள் முழுவதும் பைக்குகள் ஆக்கிரமித்துக் கொள்வதால் பயணிகள் வெயிலில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பஸ் நிலையத்திலேயே பைக் ஸ்டாண்டும் செயல்பட்டு வரும் நிலையில், வாகனங்கள் கேட்பாரின்றி நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, போலீசார் மற்றம் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய பிளாட்பாரங்களில் பைக்குகள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பழநி பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Palani Bus ,Awadi ,Palani ,Palani Bus Station ,Dindugul district ,Vausi ,Palanini Bus ,Avadi ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து